311 புள்ளிகள் சரிந்தது பங்குச்சந்தைகள் 8வது நாளாக வீழ்ச்சி

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று தொடர்ந்து 8வது நாளாக  நேற்றும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நேற்று 310.51 புள்ளிகள் சரிந்து 35,498.44 ஆக இருந்தது. காலையில் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சரிவை நோக்கி செல்லத்தொடங்கியது. வர்த்தக துவக்கத்தில் 35,831.18 புள்ளிகளாகவும், குறைந்த பட்ச அளவாக 35,912.44 புள்ளிகளாகவும் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 83.45 புள்ளிகள் குறைந்து 10,640.95 ஆக இருந்தது.  டிசிஎஸ், எஸ் வங்கி பங்குகள் அதிகபட்ச இழப்பை சந்தித்தன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், சன் பார்மா, கோல் இந்தியா பங்கு மதிப்புகளும் குறைந்தன. இவற்றின் பங்கு மதிப்பு 3 சதவீதம் வரை குறைந்தது. ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முடிவுகளை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி இருந்ததால் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சாதகமான சூழ்நிலை இல்லாததால் தொடர்ந்து 8 நாட்களாக பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: