எதிர்க்கட்சிகளின் தலைவர் யார்?: அமித்ஷா கேள்வி

ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சி கூட்டணி தலைவரின் பெயரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும் என்று பாஜ தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாஜ தலைவர்கள் தங்களது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று அவர்கள் தங்களது நிகழ்ச்சிகளையும், பிரசாரங்களையும் தொடங்கினர். ராஜஸ்தானில் நடந்த பாஜ கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு, புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் தியாகத்தை வீணாக போகவிடாது. தீவிரவாதத்துக்கு எதிரான கொள்கையில் அரசு பூஜ்ஜியம் அளவுக்கு கூட சமரசம் செய்து கொள்ளாது.

தோல்வி அல்லது வெற்றியை கண்டு பாஜ ஆணவம் கொள்ளாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தான் அது அரசியலில் உள்ளது.  மோடியை அகற்றுவோம் என்ற முழக்கத்தில் தான் மகா கூட்டணி முன்னேறி செல்கிறது. எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் பெயரை ராகுல்காந்தி அறிவிக்க வேண்டும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: