தேர்தலுக்கு முன் புல்வாமா தாக்குதல் நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது... மம்தா பேட்டி

கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் புல்வாமா தாக்குதல் நடந்தது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக பிப்ரவரி 8-ம் தேதி உளவுத் துறையிடம் இருந்து மத்திய அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

பின்னர் கூறிய அவர், 78 வாகனங்கள் ஒன்றாக அந்த இடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன்? என்றும் 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? என்றும் அடுத்து அடுத்து கேள்விகளை அவர் எழுப்பினர். மேலும் நாட்டில் வகுப்பு வாதப் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: