தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன?...ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தால் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு  போட்டி நடத்த 25-ஆம் தேதி அனுமதி கோரி பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடர்ந்தார்.

பாலமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு முழுவதும் நடத்துவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளதால் இது குறித்து பரிசீலனை செய்ய நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: