தமிழக பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 42 செயற்பொறியாளர் பணியிடத்தால் அரசு வேலைகள் முடங்கும்: முதல்வர் எப்போது கையெழுத்திடுவார்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் 53 செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு பட்டியலுக்கான கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டிடங்கள் கட்டுவது, நீர்வளப்பிரிவு மூலம் ஏரி, அணைகள் புனரமைப்பு, அணைக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை செய்ய முதன்மை தலைமை பொறியாளரின் கட்டுபாட்டில் மண்டல தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ் கோட்ட வாரியாக செயற்பொறியாளர்கள் பணியமர்த்துப்பட்டுள்ளனர். அவர்கள் தான் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து, அதற்கான பில் தொகை செட்டில் செய்வார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயற்பொறியாளர் பணியிடங்களில் தற்ேபாது 42 பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளது.

இந்த பணியிடங்களை கூடுதலாக பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், செயற்பொறியாளர்கள் பணிச்சுமையால் தவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அவர்கள், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், மிகவும் காலதாமதாக தகுதியான உதவி செயற்பொறியாளர் 53 பேர் கொண்ட பெயர் பட்டியலை சமீபத்தில் தான் இணை தலைமை பொறியாளர் அலுவலகம் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தது.  இந்த நிலையில் தற்போது அந்த பட்டியல் அடங்கிய கோப்புகள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புள்ளது. அப்படி வெளியானால் உடனடியாக அந்த பதவி உயர்வு பட்டியலுக்கு அரசாணை வெளியிட முடியாது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயம். எனவே, அதற்கு முன்பாக, செயற்பொறியாளர் பட்டியலுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவர்கள் கூறும் ‘மார்ச் மாதத்திற்குள் அறிவிக்கப்பட்ட அனைத்து கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு திட்டப்பணிகளையும் முடிக்க வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், செயற்பொறியாளர்கள் இல்லாத சூழ்நிலையில் அந்த பணிகளை யார் கண்காணிப்பார்கள் என்ற கேள்வி உள்ளது. செயற்பொறியாளர்கள் இருந்தால் தான் திட்ட பணிகளை விரைவுப்படுத்த முடியும். இல்லையெனில் பணிகளில் சுணக்கம் இருப்பது தவிர்க்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு உடனடியாக தகுதியான பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: