கத்தார் ஓபன் டென்னிஸ் ஹாலெப்பை வீழ்த்தினார் எலிஸ் மெர்டன்ஸ்

தோஹா: கத்தார் டோட்டல் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்புடன் (ரோமானியா) மோதிய மெர்டன்ஸ் 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-4, 6-3 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி கோப்பையை தட்டிச் சென்றார். உலக தரவரிசையில் ஹாலெப் 3வது இடத்திலும், மெர்டன்ஸ் 21வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: