நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை, சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு: ரஜினிகாந்த்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் தனது ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் எந்த கட்சிக்கும் ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு அறிக்கை வெளியானது. அதில்; எங்களுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை எனவும் அதேபோல எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையான தண்ணீர் பிரச்சனையை எந்த அரசு தீர்க்கிறதோ அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது மனசாட்சி படி வாக்களிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டம் நிறைவு பெற்றதும் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: