ஐடிபிஐ வங்கிக்கு எல்ஐசி 12,000 கோடி

புதுடெல்லி : நஷ்டத்தில் உள்ள ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிய எல்ஐசி,  12,000 கோடியை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.    நஷ்டத்தில் சிக்கித் தவித்து வந்த ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பெரும்பான்மையான பங்குகளை எல்ஐசி வாங்க உள்ளதாக 2018 ஜூனில் அறிவிக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைய மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியை வழங்கியது. பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 21ம் தேதி முடிவுக்கு வந்தது. ஐடிபிஐ வங்கிக்கு பங்குகளை விற்ற வகையில் 21,264 கோடி கிடைத்துள்ளது.  தற்போது ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளதால், காப்பீடு, வீட்டுக் கடன் மட்டுமல்லாமல் வங்கி துறையிலும் எல்ஐசி தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஐடிபிஐ, எல்ஐசி அதிகாரிகள், நிதி சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது ஐடிபிஐயின் மொத்த கடனில் வார கடன் அளவு 24.72 சதவீதமாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருப்பதாக கூறப்பட்டது. ஐடிபிஐயின் மூன்றாவது காலாண்டு நஷ்டம் மூன்று மடங்காக உயர்ந்து 4,185 கோடியாக அதிகரித்தது. மொத்த வருவாய் 6,190.94 கோடியாக குறைந்தது. நடப்பு காலாண்டில் ( ஜனவரி-மார்ச்) வாரா கடனை சமாளிக்க முதலீடு தேவைப்படுகிறது. இதற்காக 12,000 கோடியை ஐடிபிஐ வங்கிக்கு எல்ஐசி தரும் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: