தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களின் குடியிருப்புகளை இடிக்க தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவில் உள்ளவர்கள் வசிக்கும் குடியிருப்புகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் உள்ளிட்டோர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகள் கடந்த 1963ல் கட்டப்பட்டவை என்றும், இந்த வீடுகளை பராமரிக்க அதிக செலவாகிறது என்றும், எனவே இந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தரவும் அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, தாடண்டர் நகர் உள்பட சென்னையில் 17 இடங்களில் 1,740 கோடி செலவில் 6254 யூனிட் வீடுகளை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே, மேற்கண்ட பழைய குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தாடண்டர் நகர் குடியிருப்புவாசிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சி.சரவணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, லாபநோக்கத்தின் அடிப்படையிலேயே புதிய வீடுகள் கட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாடண்டர் நகர் வீடுகளை இடிக்க வரும் 19ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: