தமிழகத்தில் வலுவான பாஜ கூட்டணி அமையும்: மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை

அவனியாபுரம்: தமிழகத்தில் பாஜ கூட்டணி வலுவாக அமையும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மதுரை விமானநிலையத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் தியாகம் வீண் போகாது. உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மற்ற நாடுகளிடமிருந்து பாகிஸ்தான்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தகுந்த பதிலடி கொடுப்போம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜ பல்வேறு திட்டங்களை, குறிப்பாக எய்ம்ஸ், ஸ்மார்ட் சிட்டி, முத்ரா கடன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தில் 10 கோடி கழிப்பிடங்களை நாடு முழுவதும் கட்டியுள்ளது.

 தமிழகத்தில்  52 லட்சம்  கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. முத்ரா கடன் திட்டத்தில் 17 கோடி ேபருக்கு ரூ.7.50 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது அதில் ரூ.2 லட்சம் கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே  கடும் போட்டி நிலவும். தமிழகத்தில் விரைவில் கூட்டணியை முடிவு செய்வோம். இந்த கூட்டணி வலுவாக அமையும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: