சென்னை: சிபிஎஸ்இ வொக்கேஷனல் பிரிவு மாணவர்கள், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் 31 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சிபிஎஸ்சி பிளஸ் 2 வொக்கேசனல் பிரிவு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. 2018-19ம் ஆண்டிற்கான சிபிஎஸ்சி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல், 4ம் தேதி வரை நடைபெறும் என்று, சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவிருந்தது. அதன்படி ேநற்று காலை, 10.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும், 21 ஆயிரத்து, 400 பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. அதில் வொக்கேசனல் பிரிவை சேர்ந்த 12 லட்சத்துக்கு, 87 ஆயிரத்து, 359 பேர் பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 10ம் வகுப்பு மாணவர்கள் சேர்த்து 31 லட்சத்து 14 ஆயிரத்து 821 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.