சின்னத்தம்பி யானைக்கு 3 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தியது வனத்துறை

திருப்பூர்: சின்னத்தம்பி யானைக்கு வனத்துறை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியது. 3 மணி நேர போராட்டத்துக்கு பின் கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஊசி செலுத்திய பின்னும் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது சின்னத்தம்பி. மீண்டும் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை தீவிரமடைந்துள்ளது.

முதல்முறை குறி தவறிய நிலையில் 2வது முறை சின்னதம்பியின் காலில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. நேற்று சின்னத்தம்பி யானையை பிடிக்க ஆயத்த பணிகள் நடந்த நிலையில் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. சின்னத்தம்பி யானை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சின்னத்தம்பியை பிடிக்க ஏற்கனவே இரண்டு கும்கிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

யானையை பிடித்து பத்திரமாக  முகாமில் அடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்தம்பியை பிடிக்கும்போதும், முகாமுக்கு கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றும்போதும் உடல் ரீதியாக எந்த பாதிப்பும்  ஏற்படுத்தக்கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் உயிர் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  யானையை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதிக்குள் மீண்டும் கொண்டு செல்வதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்  என உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: