முட்டை விலை 465 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முட்டை விலை 5 காசுகள்  உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 465 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை அதிகரிப்பு,  நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி குறைவு போன்றவை காரணமாக, முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற  மண்டலங்களில் முட்டை விலை விபரம்  வருமாறு (காசுகளில்): ஐதராபாத் 430, விஜயவாடா 430, மும்பை 483, மைசூரு 467, பெங்களூரு 475, கொல்கத்தா 482,  டெல்லி 455 காசுகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: