தனியார் நிறுவனங்களுக்கு இணையாக 14 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் நவீனமயமாகிறது

சென்னை: தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கோ-ஆப்டெக்ஸ் 14 விற்பனை நிலையங்களை நவீனப்படுத்த கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்தின் கீழ் 175 விற்பனை நிலையங்கள்  உள்ளன. இதன் மூலம் பட்டு சேலை, வேட்டி, திரைசீலைகள், போர்வை, பெட் ஷீட், லுங்கி, சுடிதார், நைட்டி, ரெடிமேட் சட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி, பொங்கல்  போன்ற பண்டிகை காலங்களில் 30 சதவீத தள்ளுபடியும், மற்ற நாட்களில் 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் விற்பனையை அதிகரிக்க  முடியவில்லை.  இதையடுத்து கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நவீனப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, குளிர்சாதன வசதியுடன் இந்த நவீன விற்பனை நிலையங்கள்  அமைக்கப்படுகிறது.

கோவை ஆழ்வாய், சென்னை பெரம்பூர், மதுரை சிவகாசி, பழனி, பெரிய குளம், சேலம் கரூர், அரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை, நெல்லை நாகர்கோவில், வேலூர் குடியாத்தம், பெங்களூரு விஜயாநகர், விஜயவாடா பெர்காம்பூர்,  குண்டூர் உள்ளிட்ட 14 விற்பனை நிலையங்கள் நவீனப்படுத்தப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்கள் நவீனப்படுத்தும் பணி மேற்கொண்ட பிறகு, அதற்கான ெசலவு தொகை குறித்து கோ ஆப்டெக்ஸ் இயக்குனர்  அலுவலகத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைக்கவும் மண்டல மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுளளது. மேலும், தற்போது சொந்த கட்டிடத்தில் உள்ள விற்பனை நிலையங்களை நவீனப்படுத்த எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. மாறாக தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் விற்பனை நிலையத்தை நவீனப்படுத்துவதற்கு கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: