அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்காக உறை விந்து நிலையம் : கால்நடை பராமரிப்பில் தமிழக அரசு புதிய மைல்கல்

சென்னை :  அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்காக தமிழகத்தில் முதல்முறையாக கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயரில் கல்லூரி, விவசாயிகளுக்கான பயர்க்கடன், சென்னையில் பிரமாண்ட கார் மற்றும் பைக் பார்க்கிங் வசதி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கின்றன. மத்திய பட்ஜெட் கடந்த 1-ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் வருவதால் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் 8வது முறையாக தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த இவர், ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் அறிவித்த கால்நடை பராமரிப்பு சார்ந்த அறிவிப்புகளை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

* ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.  

*மரபுத்திறன் மிக்க நாட்டின, கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படுகிறது.  

*இது அழிந்துவரும் மாட்டினங்களை மீண்டும் அதிகமாக்க வழி செய்யும். வீரியம் மிக்க காளை மாடுகளை உற்பத்தி செய்ய அதிரடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,

*75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்.

*விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக ரூ.198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  

*விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்கிறது.

*தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.  

*நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1252 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: