ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சி தேர்தலில் தனித்து போட்டி: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

திருமலை: ‘‘ஆந்திராவில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது’’ என்று திருப்பதியில் நடந்த கட்சி தொண்டர்களை சந்திக்கும் சமர சங்காராவம்  நிகழ்ச்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.ஆந்திரா முழுவதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவை,  மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சி தொண்டர்களை சந்தித்து பேசும் ஸ்ரீசமர சங்காராவம்’ நிகழ்ச்சியை திருப்பதியில் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி  நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜ, ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுமா, தனித்தனியாக  போட்டியிடுமா என்பது குறித்து கவலை இல்லை. நாங்கள் தேர்தலை தனியாக சந்திக்க உள்ளோம்.

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் சந்திரபாபு நாயுடு மூட்டை, மூட்டையாக பணத்தை  கொண்டு வந்து செலவு செய்வார். ஓட்டுக்கு ரூ.2000, ரூ.3000 கொடுப்பார். அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்ளுங்கள். ஆனால் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு  தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெற இருக்கும்  தேர்தல் போராட்டத்தில் தர்மத்தின் பக்கம் நிற்கும் எங்களுக்கு வாக்களியுங்கள்.தேர்தலுக்கு முன் பல வாக்குறுதிகளை அளித்து முதல் சினிமாவை காண்பித்தார். பின்னர் பாஜவுடன் தொடர்ந்து குடும்பம் நடத்திய சந்திரபாபு நாயுடு  ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்தை விட சிறப்பு பொருளாதார உதவியே பலனைக் கொடுக்கும் என்று இரண்டாவது சினிமாவை பொதுமக்களுக்கு காண்பித்தார். விரைவில் தேர்தல் வர இருப்பதால் பின் வாங்கிய அவர் இப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தேவை என்று கூறுகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: