பிளிப்கார்ட்டில் இருந்து வால்மார்ட் விலகல்?

புதுடெல்லி:  ஆன்லைன் வர்த்த கத்தால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. என வே, கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று உள்நாட்டு சில்லறை  வர்த்தகர்களுக்கு ஆதரவாகஅந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்மத்திய அரசு சில திருத்தங்களைகடந்த டிசம்பரில் அறிவித்தது. இவை கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி அந்நிய முதலீடு உள்ள ஆன்லைன்வர்த்தக  நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்த வர்த்தக நிறுவனங்களின் பொருட்களை விற்கக்கூடாது. அதே போல், ஒரு பொருளை குறிப்பிட்ட ஒரு இணைய தளத்தில் மட்டுேம விற்பனை செய்யமுடியாது.

  இந்த புதிய நடைமுறையால் பிளிப்கார்ட் தன்னுடையஇணையதளம், ஆப்பில் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களில் 25 சதவீதத்தை நீக்கிவிட்டது.  பிளிப்கார்ட்டில்  77 சதவீத பங்குகளை ஒரு லட்சத்து ஏழாயிரம் கோடிக்கு  வாங்கி முதலீ முதலீடு செய்த வால்மார்ட் நிறுவனம் போட்ட கணக்குதப்பு கணக்காகி போய்விட்டது. இதனால், இந்திய முதலீட்டை வால்மார்ட் ஏறக்கட்டிவிடும்என்று மார்கன் ஸ்டான்லி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து  லாபத்தில்இயங்க முடியாது என்பதால் பிளிப்கார்ட்டில் இருந்து வெளியேறுவதை தவிர வால்மார்ட்டுக்குவேறு வழி இல்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: