பொங்கல் பண்டிகையின்போது தங்கம் வரலாற்று உச்சம் பவுன் ரூ.1,04,960க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 12 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை ஏற்றம் என்பது கடந்த ஆண்டில் அதிரடியாக இருந்து வந்தது. தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. 9ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,400க்கு விற்பனையானது.

10ம் தேதி வாரத்தின் இறுதி நாளன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,900க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 200க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.7,000 அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2,75,000க்கு விற்பனையானது. இந்தநிலையில், நேற்று காலையில் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.287க்கும், கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் அதிகரித்து பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

Related Stories: