நாடாளுமன்ற குழு ஆய்வு செய்து வருவதால் கருப்பு பண விவரங்களை வெளியிட முடியாது: நிதியமைச்சகம் மறுப்பு

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கருப்பு பணம் தொடர்பான ஆய்வு குறித்த அறிக்கையை தருவதற்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு  தெரிவித்துள்ளது.

 கடந்த 2011ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கருப்பு பணம் குறித்து ஆய்வு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி,  டெல்லியை சேர்ந்த பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம், பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில், நிதிமேலாண்மைக்கான தேசிய நிறுவனம்  ஆகியவை கருப்பு பணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கைகள் 4 ஆண்டுகளுக்கு முன்பே அரசிடம்  சமர்பிக்கப்பட்டுவிட்டது.   இந்நிலையில் நிறுவனங்கள் சமர்பித்த கருப்பு பண ஆய்வு அறிக்கை குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: பொது நிதி மற்றும் கொள்கை மையம், பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில், நிதிமேலாண்மைக்கான தேசிய நிறுவனத்திடம் இருந்து முறையே  2013ம் ஆண்டு டிசம்பர் 30, 2014ம் ஆண்டு ஜூலை 18, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆகிய நாட்களில் கருப்பு பணம் குறித்த ஆய்வு அறிக்கைகள் அரசால்  பெறப்பட்டுள்ளது. அறிக்கைகள் மற்றும் அதன் மீதான அரசின் நிலைபாடு உள்ளிட்டவை நிதியமைச்சகத்தால் மக்களவை செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நிதி ெதாடர்பான  நாடாளுமன்ற நிலைக்குழு முன் சமர்பிப்பதற்காக இந்த அறிக்கைகள் அனுப்பப்பட்டன.

அறிக்கைகள் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைக்குழு அது குறித்து ஆய்வு செய்யும் என்றும் மக்களவை செயலாளரும் தெரிவித்துள்ளார். ஆய்வில் உள்ள அறிக்கை  தொடர்பான தகவல்களை தருவது நாடாளுமன்ற சிறப்பு உரிமையை மீறும் செயலாகும். எனவே மனுதாரர் கேட்கும் தகவலை தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் பிரிவு 8(1)(சி) கீழ் வழங்க முடியாது. அறிக்கைகள் 2017ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி குழு முன் சமர்பிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கருப்பு பணம் தொடர்பான ஆய்வு உத்தரவிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கருப்பு பண விவகாரம் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின்  கவனத்தை பெற்றுள்ளது. என்றபோதிலும் வெளிநாடுகளின் முதலீடு ெசய்யப்பட்ட மற்றும் உள்நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் தொடர்பாக  நம்பத்தகுந்த மதிப்பீடுகள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: