ராஜிவ் கொலை கைதிகளை விடுவிக்ககோரி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு டூவீலர் பேரணி

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கின் ஆயுள் கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரும் டூவீலர் பேரணிக்கு, அனுமதிப்பது குறித்து டிஜிபி பரிசீலிக்க  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

ஆனால், விடுவிப்பது குறித்து கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி டூவீலர் பேரணி நடத்த முடிவாகியுள்ளது. இதன்படி, பிப்.20ல் கன்னியாகுமரியில் துவங்கி பிப்.28ல் சென்னையில் நிறைவு செய்து மனு அளிக்க உள்ளோம். இந்த டூவீலர் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் தனது கோரிக்கையை, தமிழக டிஜிபியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலித்து டிஜிபி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: