திருப்புவனம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டுவடமாடு விரட்டு நடந்தது. திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே கிளாதிரியில் பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விளையாட்டு நடந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 15 மாடுகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் குழுவுக்கு 9 பேர் வீதம் 15 குழுவினர் காளைகளை அடக்க களத்தில் இறங்கினர்.

மைதானத்தின் மையத்தில் நீண்ட வடத்தில்(கயிறு) கட்டப்பட்ட ஒரு காளையை 30 நிமிடத்தில் திமிழை பிடித்து அடக்கிய குழுவுக்கு ரொக்கப்பரிசு, கட்டில், பீரோ, டூவீலர், செல்போன்கள் என பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழஙகப்பட்டன. மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை கிளாதிரி ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்னுராஜா தலைமையில் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: