மணலி அரசு மேல்நிலை பள்ளியில் 40 லட்சத்தில் ஆய்வுக்கூடம்: பணிகள் தொடங்கியது

திருவொற்றியூர்: மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹40 லட்சம் செலவில் நவீன ஆய்வுக்கூடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.  மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2,700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தில்  போதுமான வசதி இல்லாததால்,  நவீன ஆய்வுக்கூடம் கட்டி தர வேண்டும் என்று பெற்றோர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை  விடுத்தனர்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்பாபு மற்றும் மணலி சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது பள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நவீன ஆய்வுக்கூடம் அமைப்பது குறித்து கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சிபிசிஎல் நிறுவன சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹40 லட்சம் செலவில் நவீன ஆய்வு கூடம் மற்றும் சத்துணவு கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் மாலை பள்ளியில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்  ராஜேஷ்சேகர் தலைமை வகித்தார். சிபிசிஎல் நிறுவன அதிகாரி மாலதி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரத்தினசாமி முன்னாள் கவுன்சிலர் ஜோசப் தலைமை ஆசிரியை விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: