தென்னாப்பிரிக்க அதிபருடன் ராகுல்காந்தி, மன்மோகன் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினர்.தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா. இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் ரமபோசா இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அதிபர் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து அதிபர் ரமபோசா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது  மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். அப்போது அவர்கள் இருதரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா கூறியதாவது:தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசா காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு கட்சிகள் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மண்டல மற்றும் உலக அளவிலான முக்கிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ராகுல் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக இரு கட்சிகளின் வெளியுறவுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: