ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். இதில் செக் குடியரசு நாட்டின் பெட்ரா கிவிடோவாவை ஒசாகா எதிர்கொண்டார்.

முதல் செட்டை 7- 6 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறையில் ஒசாகா வென்றார். இரண்டாவது செட்டை 5-7 என இழந்த அவர், மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சுமார்  இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தத ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது ஒசாகா வெல்லும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் ஆகும். ஆஸ்திரேலிய ஓபனை இவர் வெல்லுவது இதுவே முதல் முறை. பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஒசாகா மகிழ்ச்சியில் கண்கலங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: