மதுரை சின்னப்பிள்ளை, நடிகர் பிரபுதேவா உட்பட தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்மஸ்ரீ விருது: நடிகர் மோகன்லாலுக்கு பத்ம பூஷண்

புதுடெல்லி, ஜன.26: தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார் மற்றும் நடிகர் பிரபுதேவா உட்பட 8 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும், நடிகர் மோகன் லால், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்றிரவு அறிவித்தது. பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் சமூக சேவை, கலை, பொது விவகாரங்கள், அறிவியல், இன்ஜினியரிங், வர்த்தகம், தொழில்துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு,பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இந்தாண்டுக்குரிய பத்ம விருதுகள் ஒட்டுமொத்தமாக 112 பேருக்கு வழங்கப்படுகிறது. விருது பெறுவோரில் 21 பேர் பெண்கள் ஆவர். இதுதவிர, வெளிநாடுகளை சேர்ந்த 11 பேர், மறைந்தவர்கள் 3 பேர் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பத்ம பூஷண் விருது பெறும் 14 பேரில், பொது விவகாரங்கள் பிரிவில் பஞ்சாபை சேர்ந்த சுக்தேவ் சிங் தின்ஷா, கேரளாவை சேர் ந்த நடிகர் மோகன்லால் மற்றும் இஸ்ரோவை சேர்ந்த ஒய்வுபெற்ற விஞ்ஞானி நம்பி நாராயண், டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் குல்தீப் நாயர் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருது பெறுகின்றனர். இதுதவிர,  தமிழகத்தை சேர்ந்த ஆன்மீகவாதி பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா(கலை), சரத் கமல்(விளையாட்டு)நர்தகி நடராஜ்(பரதநாட்டியம்), மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை(சமூகசேவை), ஆர் வி ரமணி(மருத்துவம்), டிரம்ஸ் சிவமணி(இசை), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகளை பெறுகின்றனர்.

பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் முக்கியமாக சட்டிடீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நாட்டுபுற பாடகர் தீஜன் பாய் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜான் சாம்பர்ஸ்(வர்த்தகம்) பத்மபூஷண் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு துறையில் கவுதம் கம்பீர், சுனில் ஷெட்ரி பத்மஸ்ரீ பெறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: