குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கட்டண வவுச்சர் அறிமுகம் - பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

சென்னை: 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டண வவுச்சர் எஸ்டிவி ரூ.269ஐ பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளதாக நிர்வாக இயக்குநர் அனுபம் வத்ஸவா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தனது ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான காம்போ சிறப்புக் கட்டண வவுச்சர் எஸ்.டி.வி-269ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் 2600 நிமிடங்கள் டாக் டைம் (அனைத்து நெட்வொர்க்), 260 எஸ்.எம்.எஸ் மற்றும் நாளொன்றுக்கு 2.6 ஜிபி டேட்டா என 26 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். இச்சலுகை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை அகில இந்திய அளவில் ரூ.269 விலையில் கிடைக்கும். ேமலும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: