இங்கிலாந்தை சுருட்டி போட்ட கீமர் ரோச்... 77 ரன்களுக்கு ஆட்டமிழந்த பரிதாபம்

கென்சிங்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 77 ரன்களுக்குள் சுருண்டது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 101.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 30.2 ஓவர்களில் 77 ரன்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து கீமர் ரோச் அசத்தினார். இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட 339 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட்இண்டீஸ் உள்ளது. இதன் மூலம் வெஸ்ட்இணடீஸ் வலுவான நிலையில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: