தர்மபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேர்த்திருவிழா

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் 17ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி காலை ஏராளமான பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலமும், இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது.

22ம் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேர்த்திருவிழா நேற்று காலை 9.30 மணிக்கு  நடந்தது. இதையொட்டி சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். 9.45 மணிக்கு திருத்தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அரோகரா, அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் உப்பு மிளகு வீசி சிவசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: