மின்னணு ஓட்டு இயந்திரம் மோசடி..... தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துகிறது காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என்று லண்டனில் இருந்து இணையவழியில் அமெரிக்க வாழ் இந்திய மின்னணு தொழில் நுட்ப வல்லுனர் சையது சுஜா என்பவர் பேட்டி அளித்துள்ளார். இதற்குபாஜக பதில் அளித்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் புகார் கூறிய நபரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆஷிஸ் ராய் தலைமையிலான இந்திய பத்திரிகையாளர் சங்கம் தான் ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவான பாட்டை அவர் பாடி உள்ளார். அவர் காங்கிரஸ் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கும் எழுதுகிறார். சமூக வலைத்தளங்களில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்கிறார். லண்டனில் ராகுல் காந்தியின் பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான். எனவே இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் நடந்த சதிதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: