கட்டிட அனுமதி தருவதில் புது முயற்சி ஆதாரில் உள்ள அதிகாரி கையெழுத்துடன் இ-சான்றிதழ்: மாநகராட்சியில் அறிமுகம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் பல்வேறு சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. குறிப்பாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்துவரி, ெதாழில் வரி உள்ளிட்ட  சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து ‘நம்ம சென்னை’ செயலி மூலமும் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கட்டிட அனுமதி  விண்ணப்பங்களை இ - கையெழுத்துடன் வழங்கும் நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டுவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து வரைபடம் உள்ளிட்ட அனைத்து  ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்பிறகு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.

அந்த அனுமதி கடிதத்தில் அனுமதி  அளிக்கும் அதிகாரியின் கையெழுத்து இருக்காது. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதிகாரியின் கையெழுத்துடன் சான்றிதழ் இனி வழங்கப்படும்.  ஒப்புதல் அளிக்கும் அலுவலர், தன்  ஆதார் எண்ணை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து அவர் ஒவ்வொரு முறையும் கட்டிட தொடர்பாக அனுமதி அளிக்கும் போது  ஆதாரில் இருக்கும் அவரின் கையெழுத்து தானாகவே அந்த சான்றிதழில் இடம் பெறும். அந்த வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ேமாசடிகள் தடுக்கப்படுவதுடன்,  யார் அந்த சான்றிதழ் வழங்கினார் என்பதும் எளிதாக தெரிந்து ெகாள்ளலாம். மேலும் அதிகாரியின் கையெழுத்துக்காக மேஜையில் விண்ணப்பங்கங்கள் தேங்காது, என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: