ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சைக்கிள் ஷேரிங் திட்ட பணி தீவிரம்: விரைவில் சோதனை ஓட்டம்

சென்னை: சைக்கிள் ஷேரிங் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட சைக்கிகளை பொருத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதற்கான சோதனை ஓட்டம்  விரைவில் தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி ஐதராபாத்தை சேர்ந்த ஸ்மார்ட் பைக் நிறுவனம் இந்த  திட்டம் செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, மற்றும் அண்ணா நகர் ஆகிய இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

இந்நிலையில் இந்த இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி செய்துவருகிறது. குறிப்பாக மருத்துவமனைகள், கல்லுாரிகள், பூங்கா, பள்ளி, விளையாட்டு  மைதானம் உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி பார்த்தால் 21 இடங்களில் சைக்கிள் நிலையங்கள்  அமைக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 250 சைக்கிள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சைக்கிள் அனைத்தும் ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.  ஊழியர்கள் சைக்கிள்களை  பொருத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் பணிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் முடிவடையும். இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் தொடங்கும்  என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: