அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் பல மடங்கு வாடகை வசூலிப்பு: வாடகைதாரர்கள் சங்கத்தினர் புகார்

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று வாடகைதாரர்கள் சங்க மனு மீது கூடுதல் ஆணையர் பதில் அளித்துள்ளார்.  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்து 190 கோயில்கள் உள்ளது. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. மேலும், 22,600 கட்டிடங்கள், 33665 மனைகளும் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 120 கோடி மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை பெருக்கும் வகையில், சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.

அந்த வாடகையை கடந்த 2016 முதல் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும் என்றும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோயில் நிர்வாகங்களுக்கு அறநிலையத்துறை அறிவுரை வழங்கியது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு திருக்கோயில் கடைகள் கட்டிட வாடகை தார்கள் நலச்சங்களின் பேரமைப்பு சார்பில் அறநிலையத்துறையில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், சந்தை மதிப்பு என்ற பெயரில் கோயில் கட்டிடங்கள் மற்றும் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகையை குறைக்க வேண்டும். இக்கடைகளை நம்பியுள்ள பல லட்சம் சிறு, குறு தொழில் உற்பத்தியாளர்கள் தங்கள் வாழ்வை இழக்க நேரிடும். இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

அந்த மனுவிற்கு அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் லட்சுமணன் பதில் அளித்துள்ளார். அதில், கோயிலுக்கு சொந்தமான மனை/கட்டிடம்/கடைகளுக்கான நியாய வாடகை நிர்ணயமானது. அறநிலையத்துறை கொடைகள் சட்டம் 1959 பிரிவின் படி சந்தை மதிப்பு அடிப்படையில் அரசால் உத்தரவிடப்பட்ட அரசாணைகளின் படி நியாயம் வாடகை நிர்ணயக்குழுவில் வைத்து 1.7.2018 முதல் நியாயம் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.  

திருக்கோயில்களில் தீ விபத்து தடுப்பு மற்றும் இதர பேரிடர்கள் தவிர்க்க ஏற்பாடுகள் முதல்வர் தலைமையில் 12.2.2018ல் நடைபெற்ற சீராய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கோயில்களில் தீ தீவிபத்தை தவிர்க்கவும், அவற்றின் பாதுகாப்பை கருதியும் கோயில் வளாகத்திற்குள் மதில் சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்றிட வேண்டும். அவ்வாறு அற்றப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்திய கூறுகளை ஆராய வேண்டும். எனவே, கோயில் வாடகை தாரர்களுக்கு அகற்றப்பட்ட கடைகளுக்கு பதில் வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்ய சொந்தமான இடவசதி இருந்தால் கோயில் நிர்வாகத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: