வீடற்றவர்களுக்கான வசிப்பிடங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள வீடற்றவர்களுக்கான வசிப்பிடங்களை  நடத்த விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மொத்தம் 46 வசிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சாலையோரங்களில் வசிப்பர்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் 9 ஆயிரம் பேர் சாலை மற்றும் தெருவோரங்களில் வசிப்பதாக தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 3 கி.மீ சுற்றளவில் ஒரு வசிப்பிடங்களை அமைக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரிந்துரை  செய்திருந்தனர்.

அதனடிப்படையில் தேசிய நகர்புற வாழ்வதார திட்டத்தின் கீழ்  சென்னையில் 21 புதிய வசிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

6,7,10,11,12,13,14 ஆகிய மண்டலங்களில் தலா இரண்டு வசிப்பிடங்களும், 1,2,3,4,5,8,15 ஆகிய மண்டலங்களில் தலா ஒரு  வசிப்பிடங்களும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக ₹15.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வசிப்பிடங்கள் நடத்த விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31 ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் சமர்பிக்க வேண்டும்.  மேலும் தகவல்களுக்கு 9445190472 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: