பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘‘போலியோ சொட்டு மருந்து நாள் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23. ஊனமில்லா வாழ்க்கைக்கான இரு துளிகள், முடிந்த வரை பகிருங்கள், இனி தமிழனுக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது’’ என்ற பதிவு கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

போலியோ சொட்டு மருந்து வினியோகம் மூலம் அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அந்த பதிவை பகிர்ந்தனர். பலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தும், நண்பர்களுக்கு அனுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால் சில பெற்றோர் காலையில் குழந்தையுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரைந்தனர். மற்றவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்குமிடம் தொடர்பாக நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தனர். ஆனால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவில்ைல என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டபோது, பிப்ரவரி 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தி 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டபோது அவர் கூறியதாவது: போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதாக இருந்தால், அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் அதுதொடர்பாக முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். அதேபோல், சுகாதாரத்துறையினர் மட்டுமல்லாது, தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களையும் இணைத்து பணியாற்றுவது வழக்கம். அவ்வாறான பணிகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றார். இதனால் குறிப்பிட்ட பதிவு புரளி என்று தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: