உத்தரப்பிரதேசத்தில் வன்முறையில் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிதியுதவி

லக்னோ: புலந்த்சாஹர் வன்முறையில் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச காவல்துறையினர் 70 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹரில் பசு இறைச்சி காட்டுக்குள் கிடப்பதாகக் கூறி பஜ்ரங் தள அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் அங்கு சென்றனர். இதில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை வன்முறைக் கும்பல் தாக்கியது.

காவல்துறை வாகன ஓட்டுநர் அவரை மீட்டு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை கொண்டுசெல்ல முற்பட்டபோதும், தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பசுக் காவலர்களின் வன்முறையில் உயிரிழந்த சுபோத் குமார் சிங்குக்கு ஏற்கெனவே உத்தரப்பிரதேச அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ஒன்றிணைந்து 70 லட்சம் ரூபாய் நிதியை சுபோத் குமாரின் குடும்பத்துக்கு வழங்கியிருப்பதாக அம்மாநில காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: