லாட்டரிக்கு ஒரே ஜிஎஸ்டி குழு பரிசீலனை

புதுடெல்லி: சில மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகள் நடத்தும் லாட்டரிக்கு ஜிஎஸ்டி 12%, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் நடத்தும் லாட்டரி  சீட்டுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. லாட்டரி சீட்டு வரியில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆராய மகாராஷ்டிர நிதியமைச்சர் சுதிர் முங்கந்திவர் தலைமையில் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், கர்நாடகா நிதியமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உட்பட 8  அமைச்சர்கள் கொண்ட குழு அமக்கப்பட்டுள்ளது. இந்த குழு தற்போது உள்ள வரி அமைப்பையே தொடர்வதா அல்லது லாட்டரி அனைத்துக்கும் ஒரே வரி விகிதத்தை நடைமுறைப்படுத்துவதா என ஆராய்ந்து வருவதாக  நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: