அனைத்து காவல் நிலையங்களும் வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்க டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சுற்றறிக்கை

சென்னை: காவலர்கள் செய்த சிறப்பான பணிகள் தொடர்பாக தகவல்களை பகிர அனைத்து காவல்நிலையங்களும் வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து மாநகராட்சி காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது: அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  தங்களுக்கு கீழ் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் தங்களுக்குள் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மினாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் இருக்க வேண்டும். அந்த குரூப்பில் அந்த மாவட்டத்தில் காவலர்களின் சிறப்பான  செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை புகைப்படம், வீடியோ மற்றும் மற்றும் சிறு குறிப்புடன் பதிவிட வேண்டும்.

எத்தனை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிக்கையை வரும் 18 ம் தேதி காலை 10 மணிக்குள் காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் காவல் நிலையத்தின் பெயர், குரூப் அட்மின் பெயர், அந்த குரூப்பில் எத்தனை காவலர்கள் உள்ளனர், குரூப் தொடங்கப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: