15வது நிதிகமிஷன் உறுப்பினரானார் அஜய் நாராயண்

புதுடெல்லி: 15வது நிதி கமிஷன் உறுப்பினராக நிதித்துறை செயலாளர் அஜய் நாராயண் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்கள் இருந்த நிலையில், இவர் கடந்த டிசம்பர் மாதம் ஹஷ்முக் ஆதியாவுக்கு பதிலாக நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 15வது நிதி கமிஷன் உறுப்பினராக இருந்த சக்தி காந்ததாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த இடத்துக்கு அஜய் நாராயண் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மார்ச் 1ம் தேதி முதல் இவர் உறுப்பினராக செயல்படுவார். இந்த மாதம் இவர் ஓய்வு பெற இருப்பதால், இவரது நிதித்துறை செயலாளர் பதவி ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: