தேர்தலுக்காக கவர்ச்சி திட்டங்கள் நிதிச்சுமையை அரசு தாங்குமா? : நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் மொத்த உற்பத்தியில் நிதிச்சுமை 3.3 சதவீதம் என்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலான விஷயம்.  அரசு கஜானாவில் சிக்கல் வந்தால் பல திட்டங்கள் சிக்கலாகும். அதிலும், ஒரு பக்கம் விவசாயம் உட்பட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஜிஎஸ்டி வரி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.  இதனால், இப்போதைய நிலையில், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.3 சதவீதம் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை  அடுத்த இரண்டு மாதங்களில் அரசு சமாளிக்குமா என்பது தான் கேள்விக்குறி.  கடந்த சில மாதமாக தொழில்கள் பல வகையில் பாதிக்கப்பட்டதால், தொழிலக உற்பத்தி குறைந்து விட்டது. இயற்கை சீற்றங்கள் காரணமாக விலைவாசியும் ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் வர உள்ளது. அதற்கு மக்களை ஈர்க்கும் வகையில், கவர்ச்சி திட்டங்களை அரசு கண்டிப்பாக தரும் என்பதில் சந்தேகம் இல்ைல. அப்படி அறிவித்தால், அதற்கான செலவுகளும் அதிகரிக்கும்.  அந்த மதிப்பீடும் சேர்ந்தால், நிதி பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும். 3.5 சதவீதம் வரை போகும் என்பது தான் நிபுணர்கள் கணிப்பு.

கடந்தாண்டு பட்ஜெட்டில் அரசு காட்டிய மொத்த நிதி பற்றாக்குறை 6.24 லட்சம் கோடி. அதாவது, மொத்த உற்பத்தியில் 3.3 சதவீதம். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை கணக்கிட்டால் ெமாத்த நிதி பற்றாக்குறை 7.16  லட்சம் கோடி ரூபாய். அதாவது, 114.8 சதவீதம் நிதி பற்றாக்குறை. கடந்தாண்டு பட்ஜெட் போடும் முன் இருந்த முந்தைய ஆண்டு நிதி பற்றாக்குறை 112 சதவீதம். அதைவிட, இந்தாண்டு  முடிவில் 114.8 சதவீதம் நிதி  பற்றாக்குறை கணக்கிடப்பட்டுள்ளது.   நிதி ஆண்டு  முடியும் நிலையில், நிதி பற்றாக்குறை குறையாமல் இருக்க காரணம், முக்கியமாக தொழிலக உற்பத்தி பாதிக்கப்பட்டது; இன்னொரு முக்கிய காரணம் ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருந்ததும் தான்.   இதுமட்டுமின்றி, செலவினங்கள் அதிகரிப்பு, மானியங்கள் செலவு, விவசாயிகளுக்கு வங்கியில் நேரடி மானியம் வழங்கி வருவது என்று சில காரணங்கள் உள்ளன. இதெல்லாம் அரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை தருகிறது  என்றாலும், தேர்தலுக்குள் இன்னும் நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் ஒரு பெரும் சவால் தான்  என்பது குறிப்பிடத்தக்கது என்றும் நிபுணர்கள் கூறினர்.

* விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாய மானியங்கள் மேலும் அறிவிக்கப்பட்டால் அந்த சுமையும் இன்னும் அதிகரிக்கும்.

* மொத்தத்தில் இரண்டாவது ஆண்டாக மத்திய அரசின் நிதிச்சுமை தொடர்கிறது.

* நடப்பு 2018 -19 ம் ஆண்டு நிதி பற்றாக்குறை 39,900 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: