5000 மெகாவாட் மின்திறன்: உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை லடாக்கில் அமைக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1,00,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார்  தளங்களை அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் 500 மெகாவாட் திறன் கொண்ட 25 சோலார் தளைங்களை  அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் 12,750 டன் கார்பனை கட்டுப்படுத்தவும், டீசல் சார்ந்த ஜெனரேட்டர்களின் பயன்படாட்டை குறைக்கவும், கார்கிலுக்கு கிழக்கே 200 கி.மீ., தூரம் வரை சோலார் திட்டத்தை ஏற்படுத்த மத்திய  அரசு திட்டமிடப்பட்டுள்ளது. லடாக்கில் 5000 மெகாவாட் மின்திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க, சுமார் ரூ.45000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 2023- ம் ஆண்டில் நிறைவடைய உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சீனாவில் உள்ள டெங்கர் பாலைவன சோலார் பூங்காவே உலகின் மிகப் பெரிய சோலார் மின்உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது. இதில் 1547 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமத்தின் தலைவர் கொளதம் அதானி, 10,000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்டு சோலார் பிளான்ட் தளத்தை ராஜஸ்தான் மாநில அரசுடன்  இணைத்து அமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்குழுமத்தின் கிளைகளில் ஒன்றான Adani Renewable Energy Park நிறுவனமும் ராஜஸ்தான் மாநில அரசும் இணைந்து 50 -50 என்ற முதலீட்டு அளவில்  இப்புதிய சோலார் பிளான்டை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளது. மேலும் இத்திட்டப் பணிகள் வரும் 2022-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என அதானி குழுமம் தெரிவித்திருந்தது.   இந்தியாவில் அனல் மின் உற்பத்தியில் சிறந்து விளங்குவது அதானி பவர் நிறுவனம் தான், இந்நிறுவனம் சுமார் 10,480 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதுமட்டும் அல்லாமல் நிலக்கரி மூலம் 40 மெகாவாட்  மின்சாரத்தையும் உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: