சர்வதேச விமான சேவையில் கேட்டரிங் செலவை குறைக்க ஏர் இந்தியா புது உத்தி

புதுடெல்லி: சர்வதேச விமான சேவையில் செலவை குறைக்கும் நடவடிக்கையாக, உணவு வகைகளை சுமந்து செல்ல ஏர் இந்தியா நிறுவனம் முடிவு  செய்துள்ளது.  ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் இருந்து ஸ்டாக்ஹோம், பர்மிங்ஹாம், மான்ரிட், கோபன்ஹேகனுக்கு சர்வதேச விமான சேவையை  அளிக்கிறது. செலவை குறைக்கும் வகையில் இவற்றில் பயணிகளுக்கு கேட்டரிங் சேவை வழங்க, உணவு வகைகளை இந்தியாவில் இருந்தே சுமந்து  செல்ல முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் விமான கேட்டரிங் செலவாக 600  கோடி முதல் 800 கோடி வரை ஆகிறது. மேற்கத்திய உணவு வகைகளில் உணவு விலை இந்திய உணவு வகைகளை விட மிக அதிகம்.

அதோடு, இந்திய உணவைப்போன்று, விமான கேட்டரிங் சேவைவழங்குவோர் தரும் மேற்கத்திய உணவு வகை ருசியாகவும் இருப்பதில்ைல.    விமானத்தில் குளிர்பதன பெட்டிகள் உள்ளன. இவற்றில் இந்திய உணவு வகைகளை தரமும் ருசியும் கெடாமல் பாதுகாக்க முடியும். இவற்றை  வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும்போதும் பயணிகளுக்கு சுவை குன்றாமல் வழங்க முடியும். ஏனெனில் இந்த விமானங்கள் வெளிநாடு  சென்றதும் காத்திருக்காமல் உடனே மறு மார்க்கமாக இயக்கப்படுபவை.

 இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகள், தென்கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் இந்த நடைமுறையை  அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் இந்த திட்டத்தை தொடங்குகிறோம். எனவே, பரிமாறும் அளவை இன்னும் முடிவு  செய்யவில்லை. பிரீமியம் பயணிகளுக்கு சீஸ் போர்டு உணவு வழங்கப்படுகிறது. இவற்றை பயணிகள் விரும்புவதில்லை. வீணாக்கி விடுகிறார்கள்  என்றார். இதற்கிடையில் ஏர் இந்தியா நஷ்டத்தை ஈடுகட்ட அதிலுள்ள 76% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வரும்  நிதியாண்டில் 7,000 கோடி திரட்டப்படும் என மத்திய அரசு எதிர்பார்த்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: