தள்ளுபடிக்கு அடிமையாக்குவதாக புகார் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு ரெஸ்டாரன்ட்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: உணவு டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தள்ளுபடிக்கு அடிமை ஆக்குகின்றன என ரெஸ்டாரன்ட்கள் சில எதிர்ப்பு  தெரிவித்துள்ளன.  பொருட்கள் மட்டுமல்ல, உணவு ஆர்டர் செய்வதும் ஆன்லைனில் சாத்தியமாகி உள்ளது. ரெஸ்டாரன்ட்களுக்கு நேரில் செல்வதை  விட, மொபைல் ஆப்ஸ் மூலம் ஆர்டர்கள் குவிகின்றன. இவை ஸ்விகி, உபர் ஈட்ஸ், ஜொமெடோ போன்ற நிறுவனங்கள் மூலம் டெலிவரி  செய்யப்படுகின்றன. பயன்படுத்த எளிது என்பது மட்டுமல்ல, மெகா தள்ளுபடிகளும் இதற்கு காரணம். பெரிய பிரபல ஓட்டல்களில் நேரில் சென்று  சாப்பிடுவதை விட 20 முதல் 30 சதவீதம் தள்ளுபடியில் வீட்டுக்கே வரவழைத்துவிடலாம் என்பது பயன்பாடு உயர்வதற்கு முக்கிய காரணம்.

 சில ரெஸ்டாரன்ட்கள் இந்த உணவு டெலிவரி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஆர்டர் பெற்று விநியோகம் செய்கின்றன. ஆனால் சில  ரெஸ்டாரன்ட்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர், விற்பனை குவிகின்றன என்பதில் எந்த மாற்றுக்கருத்தும்  கிடையாது. அதேநேரத்தில் நேரில் வாடிக்கையாளர்கள் வருவதையும் இது தடை செய்கிறது. இது ஓட்டல்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே  உள்ள நெருக்கத்தை குறைக்கிறது என்பது சில ஓட்டல் நிறுவனங்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

 இதுதொடர்பாக இந்திய ரெஸ்டாரன்ட் சங்கம் மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்கள் இடையே நடந்த கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  டிஜிட்டல் மயத்தால் ரெஸ்டாரன்ட்கள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகியுள்ளன. ஆனால் அதிரடி தள்ளுபடிக்கு வாடிக்கையாளர்களை அடிமையாக்கி  விட்டன. எப்போதுமே நஷ்டத்தில் விற்பனை செய்வது சாத்தியமற்றது என ரெஸ்டாரன்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரெஸ்டாரன்கள் மூலம் பல  லட்சம் சிறு தொழில் முதலீட்டாளர்களும் பலன் பெறுகின்றன என்று ரெஸ்டாரன்ட்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: