காஷ்மீரில் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் 300 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் : உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி : காஷ்மீர் மாநிலத்தில் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் 300 தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் மூலம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த 2014-18 வரையில் தீவிரவாதிகளுக்கு எதிரான 1,213 நடவடிக்கைகளில் 738 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களில் 183 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 1,454 முறையும், சர்வதேச எல்லையில் 508 முறையும் பாகிஸ்தான் ராணுவத்தால் அத்துமீறல்கள் நடைபெற்றதாகவும், அதற்கு பாதுகாப்பு படையினர் உரிய பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே இன்று எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். நேற்று காலையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்த நிலையில், இன்று காலையில் மீண்டும் சிறிய மோட்டார் ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 முறை பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இந்திய ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: