அங்கன்வாடியில் பயிலும் நெல்லை கலெக்டர் மகள் ... சக மாணவ, மாணவிகள் உற்சாகம்

நெல்லை: நெல்லை கலெக்டர் ஷில்பா தனது இளைய மகளை பாளையிலுள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.நெல்லை மாவட்ட கலெக்டராக இருப்பவர் ஷில்பா பிரபாகர் சதீஷ். இவரது மகள் கீதாஞ்சலி. இரண்டே முக்கால் வயது ஆகும் கீதாஞ்சலியை பள்ளியில் சேர்க்க முடிவு செய்த கலெக்டர் ஷில்பா, பாளை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சமீபத்தில் சேர்த்துள்ளார். இங்கு தினமும் தவறாமல் ஆர்வமுடன் வரும் கீதாஞ்சலி மற்ற மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கற்கிறார். அவர்களுடன் இணைந்து விளையாடுகிறார்.

இதுகுறித்து ஊட்டசத்து மைய மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசூரியா கூறுகையில், இந்த மையத்தில் செல்வராணி என்ற அங்கன்வாடி பணியாளரும், ரேவதி என்ற உதவியாளரும் உள்ளனர். கல்வி உபகரணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.இங்கு கலெக்டர் மகள் கீதாஞ்சலியையும் சேர்த்து 20 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இவர்களுக்கு தினமும் அடிப்படை கல்வி போதனை, நடனமாடியபடி கல்வி கற்றல், விளையாட்டு உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. கீதாஞ்சலி நாள் தவறாமல் வந்து செல்கிறார். இது மற்ற மாணவ, மாணவிகளுக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: