2019 தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து

டெல்லி: 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டொக்வில் கடந்த 2015-ம்  ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கிழக்கு பொருளாதார மன்ற மாநாடு நடத்தப்படுகிறது. உலகின் மிக பெரிய பொருளாதார மன்றமாக கருதப்படும் கிழக்கு பொருளாதார மன்றம் ரஷ்யா, பசிபிக் பிராந்தியம் மற்றும்  ஆசிய நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் மூத்த அரசு பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து தகவல்கள் பறிமாறிகொள்ளும் தளமாக செயல்படுகிறது.

அத்தகைய கிழக்கு பொருளாதார மன்றத்தின் 5-வது மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். மேலும் தொலைபேசி உரையாடலின்போது 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து  தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: