மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மேலும் 3 அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

டெல்லி: மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மேலும் 3 அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டும் வரைவு அறிக்கை தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு, தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 31 அதிமுக எம்.பி.க்கள் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்றும் அதிமுக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பலமுறை கேட்டுக் கொண்டும், அதிமுக எம்.பி.க்கள் இருக்கைக்கு திரும்பாததால், வேணுகோபால், ராமச்சந்திரன், கோபால் ஆகிய 3 அதிமுக எம்.பி.க்களை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக, அறிவித்தார். அதேபோல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி. சிவபிரசாத்தும் 2 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: