வங்கிகளில் கல்வி கடன் பெற்ற 9% பேர் திருப்பி செலுத்தவில்லை

புதுடெல்லி:  இந்திய அரசு வங்கிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 2016 நிதியாண்டு மார்ச் 31ம் தேதியன்று அரசு வங்கிகளின் வராக் கடன் 7.2 சதவீதமாக இருந்தது. இந்த வராக் கடன் சுமை  கடந்த 2018 மார்ச் 31ம் தேதியில் 8.9 சதவீதமாக அதிகரித்துவிட்டது’ என்று கூறியுள்ளது. இந்த தகவலை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில்  தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கல்வித் துறையில் வராக் கடன் அளவு கடந்த 2015 மார்ச் 31 வரையில் 5.7 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் இது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று  தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: