பெண்கள் பள்ளி மைதானத்தில் புதர் சூழ்ந்து கிடக்கும் அவலம்

பொள்ளாச்சி :   பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 மேல் நிலைப்பள்ளி, 8 நடு நிலைப்பள்ளி, 7 துவக்கப்பள்ளி என மொத்தம் 18 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் குறிப்பிட்ட பள்ளிகளை சுற்றிலும் மதில் சுவர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதில், கோட்டூர் ரோட்டில் சுமார் 8ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி பராமரிப்பில்லாமல் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அதிலும் பள்ளியின் பின்புறம் உள்ள பெரிய அளவிலான விளையட்டு மைதானத்தை முறையாக சீர்படுத்தாமல், கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளியின் முகப்பில் உள்ள பூங்கா போன்ற பகுதியில் பல்வேறு வகையான செடிகள் மற்றும் அதனை சுற்றி மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன. ஆனால் கடந்த கடந்த சில ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் இல்லாததால், செடிக்கொடிகள் வாடி, வதங்கிய நிலையில் உள்ளது. நகராட்சிக்குட்பட்ட இப்பள்ளியை சுற்றிலும் முறையான பராமரிப்பு இல்லாததால் புதற்மண்டி கிடப்பதுடன் விஷ சந்துக்கள் உலாவரும் பகுதியாக இந்த இடம் மாறிவருகிறது. இதனால், மாணவிகள் அந்த விளையாட்டு மைதானத்தை உபயோக படுத்த முடியாமல் போகிறது.

 மேலும், மாணவிகள் தடகளபோட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிளில் தங்களின் திறமையை வெளிப்படுத்த பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்படு உள்ளது. அரசு விடுமுறை நாளில் பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே புதர்மண்டி கிடக்கும் செடிக்கொடிகளை முழுமையாக அப்புறப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: