இத்தாலி நாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... மீட்பு பணிகள் தீவிரம்

ரோம்: இத்தாலி நாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் அப்ரூஜ்ஜோ பகுதியில் காலேலாங்கோ நகர் அருகே நள்ளிரவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக வீடுகள் குலுங்கின. தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியேறினார்கள். பொதுமக்கள் சாலைகளில் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பெரும்பாலான இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன.

சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டது. இதுபற்றி தேசிய புவிஇயற்பியல் மற்றும் எரிமலையியல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், நிலநடுக்கம் காலேலாங்கோ அருகே 10 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பொருட்சேதம் ஆகியவை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: