தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை அமைப்பாக மத்திய தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதில், தலைமை தகவல் ஆணையர் உள்பட மொத்தம் 11 ஆணையர் பதவிகள் உள்ளன. இதில், 3 ஆணையர்கள் மட்டுமே பணியில் இருந்து வந்தனர். இந்நிலையில் காலியாக உள்ள தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு புதிதாக 4 தகவல் ஆணையர்கள் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர்.  இந்நிலையில், தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவாவை மத்திய அரசு நேற்று நியமனம் செய்தது. இவர் 1981ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி. இங்கிலாந்துக்கான இந்திய தூதராக பணியாற்றியவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: